Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சவால்களுக்கு மத்தியில் மீட்புப் பணி

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சவால்களுக்கு மத்தியில் மீட்புப் பணி
திபெத்தின் நாக்சு நகருக்குட்பட்ட பாகென் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதமடைந்த வீடுகள்.

339 வீடுகளும், 20 கால்நடைக் கொட்டகைகளும் இடிந்ததாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் 1,600-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 65 பேர் காயமடைந்தனர். வீடுகள் இடிந்ததால், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாக்சு நகருக்குட்பட்ட பாகென் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 7.0 ரிக்டராக பதிவானது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, பூமிக்கு அடியில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இரவு நேரத்தில் ஏற்பட்ட அதிர்வால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். சிலர் திறந்தவெளிகளிலும், சாலையோரம் நிறுத்தப்பட்ட கார்களிலும் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகள் மக்களின் அச்சத்தை அதிகரித்தன.

நிலநடுக்கத்தில் 339 வீடுகளும், 20 கால்நடைக் கொட்டகைகளும் இடிந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் 1,600-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தற்காலிக வீடுகள், கூடாரங்கள், மடக்குக் கட்டில்கள், குளிர்கால ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. சில இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டன.

பாறைகள் சரிந்ததால் தேசிய நெடுஞ்சாலை 317-ன் ஒரு பகுதியில் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் அவசர உதவி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

காணாமல் போனவர்களைத் தேடவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். அடுத்த மூன்று நாட்களில் இடைவிட்டு பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்பதால், மலைப்பகுதியில் மீட்புப் பணிகள் மேலும் சவாலாகும் நிலை உருவாகியுள்ளது.

முந்தைய செய்தி
Starlink's rising profitability may trigger aggressive broadband pricing
அடுத்த செய்தி
சகோதரரின் மூளையில் ஏற்பட்ட காயம் - அறிவியல் ஆராய்ச்சியில் அசத்திய சிறுமி

தொடர்புடைய செய்திகள்